தொடரூந்து சாரதிகள் பணிப் பகிஸ்கரிப்பில்



(க.கிஷாந்தன்)

தொடரூந்து சாரதிகள் உதவியாளர்களை பணிக்கு இணைத்து கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் தொடரூந்து கட்டுப்பாட்டளர்கள் சங்கம் ஆகியன இணைந்து 11.10.2017 அன்று இரவு முதல் திடீர் பணிநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதனால் தொடரூந்துகளில் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில் மலையகத்திலும் காலை வேளையில் பணிகளுக்கு செல்பவர்கள், பாடசாலை மாணவர்கள் என பெருந்திரளான பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதோடு, பஸ்களில் தமது பயணங்களை மேற்கொண்டனர்.

எனினும் முடிந்தவரை தொடரூந்து போக்குவரத்து நடவடிக்கையை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.