கோறளைப்பற்று, வாகரை- ஓட்டமாவடியுடன் இணைப்பை கண்டித்து கண்டன பேரணி



மட்டக்களப்பு கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமிழர்களின் பூர்வீக காணிகள் பிரிக்கப்படுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. 

இன்று முற்பகல் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளன. 

கோறளைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் வாகரை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளை ஓட்டமாவடி மத்தியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. 

அந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

வாகரை, வாழைச்சேனை, கிரான் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் முறைகேடான வகையில் எல்லைப் பிரிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவற்றினை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதன்போது, பேரணியாக சென்ற பொதுமக்கள் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.