அட்டனில் சிறுவர் தின நிகழ்வு



(க.கிஷாந்தன்)

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு அட்டன் பொலிஸ் நிலையம் அட்டன் 306 சி.லயன்ஸ் கழகம், டிக்கோயா வர்த்தக சங்கம் ஆகிய இணைந்து ஒழுங்கு செய்திருந்த சர்சதேச சிறுவர் தின நிகழ்வு 01.10.2017 அன்று காலை அட்டன் டிக்கோயா டி.எம்.சி.சி விளையாட்டு மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

சிறுவர் மற்றும் முதியோருக்கு வைத்திய முகாம், மூக்கு கண்ணாடி வழங்குதல், 1000 சிறுவர்களுக்கு மக்கள் வங்கியினால் 250 ரூபா வீதம் சேமிப்பு கணக்கு புத்தகங்கள், சக்கர நாட்காலிகள் வழங்குதல், பற் சிகிச்சை முகாம் போன்றன ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன், சிறுவர்கள் மகிழும் வகையில் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றது.

இதன்போது பரிசில்கள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.