அதிக மழைக் காரணமாக இரத்தினப்புரி எஹலியகொடவில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதியில் வசிப்போரை உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மக்களை வௌியேற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் பரிந்துரைக்கு அமைய, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதி மக்கள் வௌியேற்றப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பகுதிகளில், பொலிஸார் சிவில் அமைப்புகளுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் களுகங்கையின் மில்லகந்த பகுதியில் வௌ்ளம் ஏற்படலாம் என நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் பாலின்தநுவர, இங்கிரிய, புலத்சிங்கள, மாதுராவல மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் தாழ்நிலப் பிரதேசங்களில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறும் நீர்பாசனத் திணைக்களம் அறுவுறுத்தியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில், களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், சில பகுதிகளில் வௌ்ள அபாயம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment