மட்டக்களப்பு புனித மிக்கேல், கல்லூரி தினம்



மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 144 வது கல்லூரி தினத்தை சிறப்பிக்கும் முகமாக கல்லூரியின் 2012 ஆம் ஆண்டு உயர் தரப் பிரிவு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (02) கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்பாக இடம்பெற்றது. 

மட்டக்களப்பின் இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாப்பது மட்டுமல்லாது அதனை மென்மேலும் அழகுபடுத்தி வளப்படுத்தும் விழிப்புணர்வையும், பாரிய சமுகப் பொறுப்பையும் மட்டக்களப்பு வாழ் சமுகத்தின் ஒவ்வொரு தரப்பினருக்கும் ஏற்படுத்தும் நோக்கோடு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

அந்தவகையில், திறந்த பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் அமைந்துள்ள புதிய வீதியானது இனங்காணப்பட்டது. 

மரநடுகைச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்களையும் மர நடுகைச் செயற்பாட்டில் ஊக்கத்துடன் ஈடுபடுத்தும் நோக்கோடு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது. 

இதன் போது பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பாதுகாப்புப் படைப் பிரிவினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மரநடுகை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.