இறக்காமம் சிறுவர் பூங்காவும் பணம் அறவீடும்



(Rizv Hussain)
வரலாற்றில் முதல் தடவையாக இறக்காமம் பிரதேசத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு முற்றாக நிறைவு பெறாத நிலையில் ஒரு பிள்ளைக்கு 20 ரூபா பணம் வீதம் அறவிடப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அன்மையில் SLMC தலைவரும் அமைச்சரும்மான ரவூப் ஹக்கீம் அவர்கள் இப் பூங்காவை பார்வையிட்டு சிறுவர் பாவனைக்கு அனுமதியும் அளித்துள்ளார்.
குறித்த பூங்காவுக்கு வரும் ஒரு பிள்ளைக்கு 20 ரூபா அறவிடப்படுகிறது
ஒரு குடும்பத்தில் நான்கு அல்லது ஐந்து பிள்ளைகள் என்றால் 20 ரூபா படி 100 ரூபாவாகும் இது ஏழைக் குடும்பங்களுக்கு பெரும் சுமையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலை தொடருமானால் இக் குடும்பத்தின் நிலை என்னவாகும் ஒரு சில பெற்றோர்களின் பிள்ளைகள் பணம் இல்லாமல் பூங்காவின் வேலிகளுக்கு அப்பால் நின்று உள ரீதியாக சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஏனைய வெளிஊர்களில் இப்படி சிறுவர் பூங்காவிற்கு பணம் அறவிடப்படுவதில்லை இங்கே ஏன் இப்படி செய்கிறார்கள் என பெற்றோர்கள் ஏக்கம் தெரிவிக்கின்றனர்.
இறக்காமம் பிரதேச சபைக்கு வருமானம் ஈட்ட பல வழிகள் இருக்கின்ற போதும் இச் சின்னஞ் சிறுவர்களின் பணத்தை கொண்டு தான் இச் சபைக்கு வருமாைம் ஈட்ட வேண்டுமா ?? என மக்கள் கூறு்கின்றார்கள்.
இச் சிறுவர் நலன் கருதி இப் பூங்காவை இலவசமாக வழங்க வேண்டும் என சபைக்கு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.