இறக்காமம் பிரதேசத்திற்குட்பட்ட மத்தியஸ்த குழாம்



இறக்காமம் பிரதேசத்திற்குட்பட்ட மத்தியஸ்த குழாம் கால எல்லை முடிந்தமையினால் புதிய மத்தியஸ்தவர்களை தெரிவு செய்ய நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஐந்து நாள் பயிற்சியை பூர்த்தி செய்து மத்தியஸ்த சபை சட்ட திட்டங்கள் தொடர்பான பரீட்சையும் இடம் பெற்றது.
இதே வேளையில் நீதி அமைச்சின் கீழ் அமைந்துள்ள மத்தியஸ்த சபைகள் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர். மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்ட எம்.ஐ. முகம்மட் ஆஷாத் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
அத்தோடு திருகோணமலை மத்தியஸ்த விரிவுரையாளர் பா.சபரிநாயகம் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மிக சிறப்பான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
மேலும் இன் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலகத்திலும் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இதில் விசேட அதிதியாக கலந்து கொண்ட எம்.எம்.நஸீர் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் எல். இர்பான் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.