#காலியில் அமைதியின்மையை ஏற்படுத்திய 19 பேர் கைது



(பின்னிணைப்பு)
#காலியில் அமைதியின்மையை ஏற்படுத்திய 19 பேர் கைது.பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானும் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டார்.
 (1)
காலி பொலிஸ் பிரிவில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அங்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

வெலிபிட்டிமோதர, மஹலபுகல, ருக்வத்த, கிங்தொட்ட (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம, குருதுவத்த ஆகிய பிரதேசங்களில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த பகுதியில் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர், பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

அதேவேளை, பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய 200 க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதுதவிர, பொலிஸ் விசேட அதிரடிப்படையில் 100 பேரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக 7 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வரும் முகமாக இன்று காலை 9 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.