வர்த்தமானி அறிவித்தல் வௌியானது; சுதந்திர கட்சி தேர்தலுக்கு தயாராகிறது



எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்காக அமைப்பாளர்களை தௌிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. 

விஷேடமாக இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை இந்த தௌிவூட்டு வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இந்த தௌிவூட்டும் வேலைத்திட்டம் நடைபெறும் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறினார். 

இந்த வேலைத்திட்டம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர்களால் நடத்தப்பட உள்ளது.