வெலிமடை பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள் ளாகியுள்ளது.
அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை பகுதியில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
19.11.2017 அன்று இரவு 8.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிமடை பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு நீர் தாங்கிகளை ஏற்றச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்கும் போது, வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் மேற்படி லொறி வழுக்கி சென்று விபத்துக்குள்ளாகியதாக லொறியின் சாரதி குறிப்பிட்டுள்ளார்.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் இருவரும் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment