பலத்த காற்று - தொலைத்தொடர்பு கோபுரம் உடைந்து விழுந்துள்ளது



(க.கிஷாந்தன்)

சீரற்ற காலநிலை காரணமாக டயகம வெஸ்ட் இலக்கம் 2 தமிழ் மகா வித்தியாலயத்தினுள் வெள்ள நீர் உட்புகுந்ததால் இவ்வித்தியாலயத்தின் ஒன்று தொடக்கம் ஐந்து வரையிலான ஆரம்ப பிரிவு கட்டிடம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயர் தர வகுப்புகளும், விஞ்ஞான ஆய்வு கூட பகுதியும் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் உட்புகுந்ததன் காரணமாக பாடசாலையின் தளபாடங்களும், ஆவணங்களுக்கும் சேதமாகியுள்ளன.

இது இவ்வாறிருக்க அக்கரப்பத்தனை பிரதேசத்தில் அமைந்துள்ள தொலைதொடர்பு நிலையம் ஒன்றின் மீது மரம் ஒன்று விழுந்ததில் நிலையத்தின் ஒரு பகுதி மற்றும் தொலைத்தொடர்பு கோபுரமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

பல பிரதேசங்களுக்கான தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மக்களின் சேத விபரங்களை அறிவிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையத்தின் மீது விழுந்துள்ள மரத்தினை அகற்றி தொலைதொடர்புக்கான வசதிகளை செய்து கொடுப்பத்தில் டெலிகொம் நிறுவனம் அதன் பணிகளை முன்னெடுத்துள்ளது.

டெலிகொம் நிறுவனத்தின் பொறியியலாளர்கள், பணியாளர்கள் இதனை வழமைக்கு கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.