#IsmailUvaizurRahman #ViratKohli
இந்திய அணித் தலைவராக இருந்து கொண்டு 12 டெஸ்ட் சதத்தினைப் பெற்று இந்திய முன்னாள் தலைவர்களான,சுனில் கவாஸ்கர்(11), முஹம்மத் அஸார்தீனின்(9) சாதனையை முறியடித்தார். அத்துடன் ஒரு டெஸ்ட் அணித் தலைவராக, 5 இரட்டைச் சதங்களைப் பெற்றவர் என்ற மே.இ.அணித் தலைவர் பிறைன் லாராவின் சாதனையையையும், இலங்கை அணிக் கெதிராக,இன்று இந்தியாவில் நிகழ்த்தினார்.
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்புரில் நடைபெற்று வருகின்றது.
இலங்கை அணி தனது முதல் இனிங்ஸில் 205 விக்கெட்டுக்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முரளி விஜய் சதம் விளாசினார், பின்னர் செத்தேஷ்வர் புஜாரா சதம் விளாசினார் இவர்களை தொடர்ந்து இந்திய அணி தலைவர் விராட் தனது இரட்டை சதத்தினையும் பதிவு செய்தார் இறுதியாக ரோஹித் சர்மாவும் சதம் விளாசினார்.
ரோஹித் சர்மா 2013 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சதம் பெற்றதகைத் தொடர்ந்து எந்தவொரு டெஸ்ட் சதத்தினையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகையால் நான்னகு வருடம் கழித்து மீண்டும் சதம் விளாசி ரோஹித் சர்மா தனது ஆளுமையினை வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment
Post a Comment