காணாமல் போயிருந்த இருவரின் சடலங்கள் மீட்பு



(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த இருவரின் சடலங்களை கடற்படை சுழியோடிகளின் உதவியை கொண்டு 28.11.2017 அன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை எனவும் ஒரு தாயில் வயிற்றில் பிறந்த இரண்டு தந்தையர்களின் பிள்ளைகளான சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 28), பரமேஷ்வரன் மகாலெட்சுமி (வயது 19) ஆகிய என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொழும்பு கணேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த மேற்படி அண்ணன், தங்கை இருவரும் இவர்களின் தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவிற்காக கடந்த 23ம் திகதி பாக்றோ தோட்டத்திற்கு கெப் ரக வாகனம் ஒன்றில் வருகை தந்துள்ளனர்.

கடந்த 25.11.2017 அன்று குறித்த விழா நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக வருகை தந்த இவர்கள் கடந்த 26ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் 27.11.2017 அன்று உறவினர்களால் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் கையடக்க தொலைபேசி ஒன்று காணாமல் போனது தொடர்பாக பொலிஸில் முறைபாடு செய்து விட்டு வருவதாக கூறிச் சென்ற இவர்கள் காணாமல் போயிருப்பதாக பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் பயணம் செய்த கெப் ரக வாகனம் கவரவில சிங்கள பாடசாலை ஒன்றிற்கு அருகில் ஆள்ளில்லாமல் காணப்படுவதாக பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் சிலரால் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது