கைதடி – கோப்பாய், வண்ணாத்திப்பாலத்தின் கீழ் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
49 வயதான கனகரத்தினம் கோணேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரியை சேர்ந்த குறித்த நபர், மரவன்பிளவு சகலகலா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் என நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தெல்லிப்பளையில் வசிக்கும் தனது தங்கையை பார்க்கச் சென்றிருந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment