இலங்கையின் இரண்டாம் பிரஜையான பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்



#IsmailUvaizurRahman.
பிணை முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இலங்கையின் இரண்டாம் பிரஜையான  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை வேளையில் முன்னிலையாகவுள்ளார்.
அண்மையில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி விளக்கமளிக்க தாம் தயார் என பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஒருவர் மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைகளுக்கு ஆஜராகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.