#RizviHusain
இறக்காமத்தை சேர்ந்த பொலிஸ் சாஜன்ட் 62074 M.H. நஸார் பொலிஸ் சேவையிலிருந்து தனது 51 வது வயதில், இன்றுடன் முன்கூட்டிய ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.
1989 ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டு இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் கடமை புரிந்து தனது 29 ஆண்டு சேவையினை பூர்த்தி செய்து பொலிஸ் திணைக்களத்திலிருந்து இன்று 2017.11.01 ஆம் திகதி ஓய்வு பெறுகின்றார்.
யுத்த காலப்பகுதியில் நாட்டுக்காக தனது உயிரை துச்சமென நினைத்து பல கஷ்ட பிரதேசங்களில் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு இறுதியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி அக்கரைப்பற்று நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர் Courts Officer (C.O) 07 வருடம் சேவையினை இன்றுடன் பூர்த்தி செய்தார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சேவையினைப் பாராட்டி இன்று அக்கரைப்பற்று நீதிபதி கௌரவ A. பீட்டர் போல் அவர்களின் பிரசன்மத்துடன் மற்றும் அக்கரைப்ற்று சட்டத்தரணிகள் சங்கத்தினர் மதிய போசன விருந்துபசாராம் வழங்கி சிறப்பித்தனர்.





Post a Comment
Post a Comment