அக்கரைப்பற்று -சிரேஸ்ட கணக்காளர் பஸீலூர் றஹ்மான் (Bsc), (FCMA)தெ.கி.பல்கலை புதிய BURSAR



(Rizwan Shalih)

இலங்கை  தென்கிழக்கு பல்கலைகழகத்தின்   BURSAR ஆக நியமனம்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் BURSAR ஆக அக்கரைப்பற்றைச்சேர்ந்த  சிரேஸ்ட கணகடகாளர்  M.I.பஸீலூர் றஹ்மான் (Bsc), (FCMA)  2017.11.20ஆம் திகதி தனது கடமையினை,பொறுப்பேற்றுக் கொண்டார்.  

அக்கரைப்பற்றில் விஞ்ஞானப் பட்டதாரியொருவர், பட்டய முகாமைத்துவ கணக்காளர் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் யாழ் பல்கலைகழக விஞ்ஞான பட்டதாரியும், பட்டய முகாமைத்துவ கணக்காளரும் ஆவார்.

இவர் சவூதி அரேபியா, துபாய் போன்ற நாடுகளில் சிரேஷ்ட கணக்காளாராகவும், இலங்கை பெருந்தோட்ட பயிர்ச்செய்கை அமைச்சிலும், இன்னும் பல அமைச்சுக்களிலும் கணக்காளாராகவும், இறுதியாக ரஜரட்ட பல்கலைகழகத்தில் BURSAR ஆகவும்  பணிபுரிந்தார்.

அக்கரைப்பற்று முதலியார் வீதியைச் சேர்ந்த மர்ஹூம் அல்ஹாஜ். U.L.M.இஸ்மாயில் (Lanka Stores), ஹாஜியானி குழந்தை உம்மா ஆகியோர்களின் புதல்வரும், Dr.கலீலூர் ரஹ்மான், சட்டத்தரணி. உவைசுர் ரஹ்மான், ஆசிரியர். ஜெலீலூர் ரஹ்மான், அப்தூர் ரஹ்மான் ஆகியோர்களின் சகோதரரும் ஆவார்.