பாவனைக்கு உதவாத அப்பிள்களும் பராமுகங் காட்டும் PHI களும்




அக்கரைப்பற்றின்  பல்வேறு இடங்களிலும் பாவனைக்கு உதவாத அப்பிள்கள் ருபா 60/= இற்கு விற்கப் படுகின்றன. இவற்றினை வெட்டுகின்ற போது, உள்ளே சிவப்பு நிறம் தென்படுகின்றது. சில இடங்களில் புளுக்களும் உள்ளது. இத்தகைய அப்பிள்களையே பலுாடா, மற்றும் ஏனைய தயாரிப்புக்களுக்கும் பயன் படுத்துகின்றனர். நுகர்வோர்,இது தொடர்பாக உரிய பழங்களுடன் முறையிட்டால் ”அப்பிளை வெட்டிப் பார்த்து வாங்க முடியாது” என சொல்விட்டு உரிய பணத்தையும் சூறையாடுகின்றனர்.


இது தொடர்பில் பொதுச் சுகாதரா பரிசோதகர்களுக்கு முறையிட்டும், எந்த நடவடிக்கைளும்,இத்தகைய வியாபாரிகளுக்கெதிராக மேற் கொள்ளப் படவில்லையென பொதுமக்கள் புகாரிடுகின்றனர்.

அக்கரைப்பற்று சுகாதரா வைத்திய அதிகாரியே,இது உங்கள் கவனத்திற்கு!