12வது முறையாக நடைபெறும், ஜனாதிபதி தங்கக் கிண்ண வொலிபோல் போட்டி - 2017 நிறைவு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த போட்டியில், நான்கு பிரிவுகளின் கீழ் திறந்த போட்டிகளாக ஆண்கள், பெண்கள் மற்றும் 22 வயதிற்கு குறைந்த ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டனர்.
திறந்த போட்டிகளாக இடம்பெற்ற ஆண்களுக்கான போட்டியில் கிண்ணத்தை கைப்பற்றிய ஐக்கிய விளையாட்டு சங்கத்திற்கும் பெண்கள் பிரிவு கிண்ணத்தை வெற்றி பெற்ற கொஸ்வாடிய விஜய விளையாட்டுக் கழகத்திற்கும் தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா காசோலை, தங்க விருது மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.
22 வயதிற்கு குறைந்த ஆண்கள் பிரிவு போட்டியில் கிண்ணத்தை வெற்றிபெற்ற யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்திற்கும் பெண்கள் பிரிவில் கிண்ணத்தை வெற்றிபெற்ற கலிகமுவ ஸ்ரீபெரகும் விளையாட்டுக் கழகத்திற்கும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை, தங்க கிண்ணம் மற்றும் சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.
10 வருடத்திற்கும் மேலாக வொலிபோல் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கிய நிறுவனத்தைப் பாராட்டி விசேட விருது ஜனாதிபதியினால் இதன்போது வழங்கப்பட்டது என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
நாடளாவிய ரீதியல் 300 கிராம சேவகர் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 2500 அணிகளைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இப்போட்டிகளில் பங்குபற்றினர். இலங்கையில் வொலிபோல் போட்டிகளில் பாரியளவில் நடைபெறும் போட்டி நிகழ்ச்சி இதுவாகும்.
இந்த நிகழ்வில் இலங்கை வொலிபோல் சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, உப தலைவர் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க பிரியந்த, வொலிபோல் சம்மேளனத்தின் தலைமை செயலாளர் ஏ.எஸ்.நாலக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post a Comment
Post a Comment