(அப்துல்சலாம் யாசீம் )
திருகோணமலையில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகுழுவொன்றின் வேட்புமனு அங்கீகாரம்!
திருகோணமலை மாவட்டத்தின் முதல் கட்டமாக 07 உள்ளுர் அதிகாரசபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 11ம் திகதி தொடக்கம் 14ம் திகதி மதியம் 12 மணிவரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மொத்தமாக 53 அரசியல் கட்சிகளும் 01 சுயேட்சைக்குழுவும் இதன்போது வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தன.இவற்றுள் மொத்தமாக 04 அரசியல்கட்சிகளின் வேட்புமனுத்தாக்கல் நிராகரிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச சபைக்கு வேட்புமனுத்தாக்கல் செய்த ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணிஇ திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்த தமிழர் விடுதலைக்கூட்டணிஇ அகில இலங்கை தமழர் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment