அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடனான தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறையானது எதிர்வரும் 8ஆம் திகதி வௌ்ளிக்கிழமை(8) ஆரம்பமாகின்றது.
பாடசாலைகளுக்கான 2018ஆம் ஆண்டின் முதலாவது தவணை ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சைகள் மத்திய நிலையமாக செயற்படும் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகும் சாதாரணத் தர பரீட்சைகள் 21
ஆம் திகதி வரை நடைபெறும்.
ஆம் திகதி வரை நடைபெறும்.
இந்த வருடம் நாடுபூராகவும், 5116 மத்திய நிலையங்கள் ஊடாக 688,578 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் பீ. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment