சாவகச்சேரி நகர் பகுதியில் முச்சக்கர வண்டியில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் சாவகச்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே, இனந்தெரியாத நபர்கள், அவரது வாகனத்தை மறித்து இவ்வாறு தாக்கியுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த இருவர் ஊடகவியலாளரை பாதுகாக்க முற்பட்டுள்ளனர்.
எனினும், அவர்கள் மீதும் முச்சக்கர வண்டியில் வந்த ஆசாமிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
(யாழ் நிருபர் சுமித்தி)

Post a Comment
Post a Comment