அக்கரைப்பற்றில் அமைதிப் பேரணி




காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை மிக விரைவாகத் திறந்து, முறையான விசாரணைகளை நடத்துமாறு கோரி, அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகாமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று, இன்று (10) மேற்கொள்ளப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் அம்பாறை மாவட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில், இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதற்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட பெண்கள் அரங்கு, மனித அபிவிருத்தி ஸ்தாபனம், கல்முனை சமூக சிற்பிகள் அமைப்பு, மகா சக்தி அமைப்பு என்பன இணைந்து கொண்டன.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள இனத்தவர்கள் சுமார் 3,000 பேர் காணாமல் போயுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.