ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் அபுசாலி, ஜனாசா,இன்று லைற் ஹவுஸ் வீதி, கடற்கரைக் கடலில், பாறாங் கற்களுக்கு இடையில், சிக்கிய நிலையில் கண்டெடுக்கப் பட்டது.
அக்கரைப்பற்று நீதிபதி திரு.பீற்றர் போல், மரண விசாரணகைளை மேற் கொண்டு,பிதேப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் சட்ட வைத்திய அதிகாரியினைப் பணித்தார்.
(ஆரம்பத் தகவல்)
வியாழன்அதிகாலை 4 மணியளவில் கடலுக்குச்சென்ற இரண்டு மீனவர்கள் கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த அலையில் சிக்கியுள்ளனர்.
இதன்போது, 3 பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய ஒருவரே காணாமற்போயுள்ளார்.
காணாமற்போனவரைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, கடந்த 15 ஆம் திகதி நீர்கொழும்பு கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.



Post a Comment
Post a Comment