நோர்வூட் பிரதேசசபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில், தமது கட்சியின் தமிழ் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் நீக்கப்பட்டுள்ளதாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.
ஹட்டன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அதிக சபைகளில் சேவல் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் இணைந்து போட்டியிடவுள்ளன.
இதனையடுத்து, நோர்வூட் பிரதேச சபையிலும் மஸ்கெலியா பிரதேச சபையிலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தமிழ் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் என்னால் கையளிக்கப்பட்டது.
எனினும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பெயர் பட்டியலே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட உள்வாங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தமிழ் வேட்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையினால் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள சுதந்திர கட்சியின் அங்கத்தவர்கள் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டடுள்ளது.
எம்மால் வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் ஹட்டன் - டிக்கோயா நகரசபையில் மூன்று சிங்கள வேட்பாளர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளது தமிழ் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment