கல்லியடி ஆற்றில், செல்பி எடுத்த மாணவர்கள் மரணித்தனர்



முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - கல்லியடி ஆற்றுப் பகுதியில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நேற்று உயிரிழந்துள்ளனர். 

நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த அவர்கள் புகைப்படம் எடுப்பதற்காக ஆழமான பகுதி நோக்கிச் சென்ற போதே இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இவர்கள் புதுக்குடியிருப்பு - சிவநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான இருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் (2019) வணிக பிரிவில் கல்வி கற்கும் தனுஸ் (வயது 17) 2019 உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் பகீரதன் (வயது 17) ஆகிய இரண்டு மாணவர்களே நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இவர்கள் நீரில் மூழ்கிய விடயத்தை நண்பர்கள் வந்து கூறியதும், கிராம மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுட்ட போதும், இருவரது சடலத்தையே மீட்க முடிந்துள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.