ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலாவது மக்கள் சந்திப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(17) ஹப்புத்தளை நகரில் நடைபெற்றது.
முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் இந்த மக்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
இதனபோது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளான ஹல்துமுல்ல பிரதேசசபையின் முன்னாள் உபதலைவர் சுகுமாரன் நாயர், ஹப்புத்தளை பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் அசோக உதயகுமார ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இன்று இணைந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் திசாநாயக்க, செந்தில் தொண்டமான் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.


Post a Comment
Post a Comment