அம்பாறை பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி களுக்கொல்ல காட்டுப் பிரதேசத்தில் 07 வயது மதிக்கத்தக்க யானையொன்று, இன்று (12) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலைடுத்து, குறித்த இடத்துக்கு வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுடன் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோய் வாய்ப்பட்ட நிலையில், இந்த யானை இறந்திருக்கலாமென, வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment