(#Rizvi)
இறக்காமம் பிரதேசத்திற்குட்பட்ட குடுவில் நெய்னாகாடு வீதி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கையில் பல வருட காலமாக சீர் செய்யப்படாத நிலையில் இருந்த வீதியை வீதி அதிகார சபையின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்த காறர்களுக்கு ஒப்படைக்கப்பட்டு இனனும் இப்பாதைக்குரிய வேலைகள் செய்து முடிக்கப்படவில்லை என மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த வீதியால் மக்கள் சம்மாந்துறை நெய்னாகாடு ஊடாக குடுவில் இறக்காமம் போன்ற ஊர்களுக்கு ஆசிரியர்கள் விவசாய்கள் வியாபாரிகள் பொது மக்கள் பயணம் செய்வதில் பெரிதும் சிரமத்தை எதிர் நோக்கி செல்கின்றனர் .
இது தொடர்பாக வீதி அதிகார சபை அதிகாரிகள் பொறியலாளர்கள் கவனத்தில் கொண்டு மக்கள் நலனுக்காக இவ் வீதியை துரிதப்படுத்தித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Post a Comment
Post a Comment