வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்



2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் எனப்படும் மூன்றாவது வாசிப்பு சற்று நேரத்திற்கு முன்னர் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
எதிராக 56 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.