தடை செய்யப்பட்ட மாத்திரைகளை வைத்திருந்தவருக்கு விளக்க மறியல்



(பின்னிணைப்பு)

20.12.2017ல் குறித்த குற்றத்திற்காக நேற்றைய தினம் கைதான, அக்கரைப்பற்றைச் சேர்ந்த 65 வயது மதிக்கத் தக்க சந்தேக நபர், அம்பாரை நீதிமன்ற பதில் நீதவானின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். இவருக்கு பிணை வழங்குமாறு இவரது சட்டத்தரணியால் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.  விசாரணை முடிவடையவில்லை என்றும், இன்னும் சில தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், பிணை வழங்குவதற்கு, பொலிசார் ஆட்சேபனையினை தெரிவித்திருந்தனர். குறித்த சந்தேக நபரை எதிர்வரும்,Dec 26 ந் திகதி வரை விளக்க மறியியலில் வைக்குமாறு பதில் நீதிபதி கட்டளையிட்டார்.

(புலனாய்வுச் செய்த-ியாளர்- ACHEALA)

சுமார் 23 000 Tramadol வில்லைகளை தன் உடமையில், வைத்திருந்த ஒருவரை, அம்பாரையில் வைத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கண்டியிலிருந்து அம்பாரை நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ்ஸில் ஒரு பொதி வந்துள்ளது. அப் பொதியினை, பெறுவதற்கு குறித்த ஒரு நபர், பல தடவைகள் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார். பின்பு, அதனைப் பெற்று தனது உடமையில் வைத்து,தமது காருக்குள் ஏற்ற முற்பட்ட  சமயத்தில், பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேகபர், அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்றும், அவர் இன்று அம்பாரை நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும், எமது விசேட செய்தியாளர், தெரிவித்துள்ளார்.