
ஸ்ரீலங்கன் எயார்லயின்ஸ் விமான சேவையின் பணிப்பாளர் குழுவின் ஆறு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
இதன் காரணத்தால் ஸ்ரீலங்கா விமான சேவைக்கு புதிய பணிப்பாளர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லயின்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகளில் இடம்பெற்றுள்ள ஊழில் மோசடி தொடர்பில் ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ள நிலையில் ஆறு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment
Post a Comment