கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டு பெண் பலி





தங்காலை - மாரகோல்லி பகுதியில் கடலில் நீராடச் சென்ற வௌிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கபுஹேன்வல பகுதியில் குளிக்கச் சென்ற இவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

இதனையடுத்து, மீட்கப்பட்ட அவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார். 

இவர் 59 வயதான ஜேர்மன் பிரஜை என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.