போலி பாமசி உரிமையாளருக்கு அபராதம்



(அப்துல்சலாம் யாசீம்  )

போலி பாமசி உரிமையாளருக்கு   அபராதம் செலுத்துமாறும் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருமா
றும் திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு தண்டம் அறிவிட உத்தரவிடப்பட்டவர் திருகோணமலை
வடகரை வீதி பரஞ்சோதி மெடிக்கல் முகாமையாரான ஜே.அன்டன் கௌரிதாஷன் எனவும் தெரியவருகின்றது.

திருகோணமலை பிராந்திய உணவு மற்றும் மருந்து பரிசோதகர்களான
 ஆர்.முகுந்தன்  டி.சிவகுமார்   தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால்
 வழங்கப்பட்ட உரிமம்   (லைஸன்ஸ்)  இல்லாமல் பாமசியை நடாத்தியமை

காலாவதியான ஆங்கில மருந்து வகைகளை விற்பனைக்காக வௌிக்காட்டி
 வைத்திருந்தமையும் களஞ்சியப்படுத்தியமையும் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்நது.

அவ்வழக்கு விசாரணை இன்றைய தினம் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்ட போது முதலாவது குற்றச்சாட்டுக்கு
ஜம்பதாயிரம் அபராதம் செலுத்துமாறும் அதனை கட்ட தவறும் பட்ஷத்தில்
 ஆறு மாத கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும்


இரண்டாவது குற்றச்சாட்டிற்காக ஜம்பதாயிரம் ரூபாய் அபராதம்
 செலுத்துமாறும் அப்பணத்தை செலுத்த தவறும் பட்ஷத்தில் ஆறு மாதம்
 கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் மேலதிகமாக தினசரி பத்திரினையொன்றில்
முதற்பக்க செய்தியாக  பொதுமக்களிடம் பொது மன்னிப்பு கோர வேண்டும் எனவும்
அதனையடுத்து பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை பிரதியினை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும்
 திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா கட்டளையிட்டார்.