புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான இறுதிநாள் விவாதம் இன்று திங்கட்கிழமை அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டுள்ள பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 29, 30, 31 மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுதொடர்பில் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக இந்த விவாதம் இன்றும் நடைபெறவுள்ளது


Post a Comment
Post a Comment