ரொட்டவெவ மு.வி. 01ம் தரத்திற்கு ஆசிரியரொருவரை நியமிக்குக!



(A,S.Yassem)

ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி 01ம் தரத்திற்கு ஆசிரியரொருவரை நியமித்து தருமாறு பல தடவைகள் கல்வி அமைச்சின் உயரதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தெரியப்படுத்தியும் கல்வி மேம்பாடு விடயத்தில் மந்தகெதியில் செயற்படுவதாகவும் கிராமமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித பேகொல்லாகம ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் கல்வி விடயத்தில் அக்கறை காட்டி 01ம் தரத்திற்கு உடனடியாக ஆசிரியரொருவரை நியமித்து தருமாறு கிராமமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.