ஜனாதிபதியின் பதவி காலம்;5 வருடங்கள்



ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து ஆண்டுகளுடன் முடிவடைய வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார். 

தனது ஆட்சிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்ததன் பின்னரே உயர் நீதிமன்றம் தனது இரகசிய முடிவை ஜனாதிபதிடம் தெரிவித்துள்ளது. 

ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் மூலமே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.