ஊவா மாகாணத்தின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர், பதுளையிலுள்ள தமிழ் பெண்கள் பாடசாலை ஒன்றின் அதிபரை, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து, முழந்தாழிட வைத்து மன்னிப்புக் கோர வைத்ததோடு, மாணவி ஒருவரை, குறித்த பாடசாலையில் சேர்த்துக் கொள்ளும்படி, வற்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, கெபே அமைப்பு மற்றும் இலங்கை மனித உரிமைகள் கேந்திரத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த பாடசாலையில் தமது மகளை அனுமதிப்பதற்காக, பெற்றோர், சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகரிடம் இருந்து கடிதம் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதிபரைப் பார்க்கச் சென்றுள்ளனர்.
எனினும், அந்தக் கடிதத்தை நிராகரித்த அதிபர், அந்த அரசியல்வாதியின் கோரிக்கையை நிறைவேற்றாததோடு, கல்வி அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க மட்டுமே தான் செயற்படுவேன் எனவும், கூறியுள்ளார்.
இந்தநிலையில், சம்பந்தப்பட்ட அதிபரை ஊவா மாகாண கல்வி அதிகாரிகளின் ஊடாக தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வரவழைத்த அந்த அரசியல்வாதி, பலவந்தமாக, மண்டியிட வைத்து மன்னிப்பு கோர வைத்துள்ளதாக, கெபே அமைப்பினரால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஆராயந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கீர்த்தி தென்னக்கோன் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment
Post a Comment