அக்கரைப்பற்று மாநகர ஆணையர்,முன்னாள் முதல்வர் பிணையில் விடுதலை



(இர்சாத்)
அக்கரைப்பற்று தொழி நுட்பக் கல்லுாரிக்கு அருகில்,  தனியார் காணியொன்றினுள் கடந்த 2015 காலப்பகுதியில் குற்றமுறையாக அத்துமீறி, காணிக்கு பாதிப்பு ஏற்படுத்தியாக தனிப்பட்ட பிராதில் கூறப்பட்ட சந்தேக நபர்களான, அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் அஸ்மி, முன்னாள் முதல்வர் அதாவுல்லாஹ் அலி சக்கி ஆகியோரை,தலா ரூபா 50 000/- தனிப்பட்ட பிணையில் செல்ல அக்கரைப்பற்று கௌரவ நீதிமன்ற நீதவான் திரு.பீற்றர் போல் இன்று உத்தரவிட்டார்.

இந்தத் தனிப்பட்ட வழக்கினை, முறைப்பாட்டாளர் நலன் கருதி சிரேஸ்ட சட்டத்தரணி பாறுக் தாக்கல் செய்திருந்தார். எதிராளிகளாக  அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் அஸ்மி, முன்னாள் முதல்வர் சக்கி,தொழில்நுட்பக் குழுவினரையும் குறிப்பிட்டிருந்தார்.சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி பஹிஜ் ஆஜரானார்.

இவ்வழக்கு மீண்டும் மார்ச் மாதம் அக்கரைப்ற்று நீதிவான் நீதிமன்றில், அழைக்கப்படவுள்ளது.