(க.கிஷாந்தன்)
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை லோகி தோட்ட தொழிற்சாலைக்கு அருகாமையில் 23.01.2018 அன்று இரவு 7 மணியளவில் கனரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதி சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தேயிலை தூள் பக்கட்களை ஏற்றி வருவதற்காக தலவாக்கலை பகுதியிலிருந்து லிந்துலை பகுதிக்கு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிரே வந்த மோட்டர் சைக்கிள் ஒன்றுக்கு இடமளிக்கும் போது வாகன சாரதிக்கு குறித்த வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment