ஊவா உறுப்பினர் ஏ.கணேசமூர்த்தி பிணையில்




கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் ஏ.கணேசமூர்த்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் இன்று (26) காலை செய்யப்பட்ட இவர், பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய இவர் 100,000 ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த வ​ழக்கு எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊவா மாகாண சபை வளாகத்தில் நேற்று, ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் கணேஷமூர்த்தியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் தலா 10,000 ரூபாய் ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.