(க.கிஷாந்தன்)
பன்மூர் தோட்டத்தில் சிறுத்தையின் அட்டகாசம் தொடரும் நிலையில் இதுவரை சிறுத்தையின் தாக்குதலுக்கு 7 பேர் பாதிக்கப்புக்குள்ளாகியுள்ளனர்.
பாதிக்குள்ளாகிய எழுவருக்கும் சிறுத்தை தாக்குதலின் மூலம் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
சிறுத்தையின் அட்டகாசத்தை தடுப்பதற்காக துப்பாக்கிகளுடன் வருகை தந்த வனஜீவராசிகள், அட்டன் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், சிறுத்தையின் அட்டகாசத்தை தடுக்க முடியாது இருந்த நிலையில் மேலும் சிறுத்தை பாதுகாப்பு அதிகாரிகளின் முன்னாலே மீண்டும் ஒருவரை தாக்கியுள்ளது. தாக்குதலுக்குள்ளான நபர் தீ பந்தம் ஒன்றை ஏந்திச் செல்லுகையில் சிறுத்தையால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
மரங்களுக்கிடையில் தாவி தாவி தாக்குதலை உண்டுபன்னும் சிறுத்தையை பிடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடியாத நிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பொது மக்கள் அணைவரும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களது வீடுகளுக்கு சென்றால் சிறுத்தையின் தாக்கம் அதிகரிக்கும் என்ற அச்சதால் சிறுத்தையை பிடித்தே தீர்வோம் என்று இவர்கள் அவ்விடத்தை விட்டு செல்லாமல் இருப்பது குறிப்பிடதக்கது.


Post a Comment
Post a Comment