தடுத்து வைக்கப்பட்டிருந்த,சந்தேக நபர் தற்கொலை



புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 17 வயதான
சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

நேற்று இரவு புறக்கோட்டை - பெஸ்தியன் மாவத்தை பகுதியில் கஞ்சாவுடன் இவர் கைதுசெய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். 

மேலும், இவர் ஹபுதலை - கிரிமானகம பகுதியைச் சேர்ந்த ஒருவராகும். 

இவர் தனது ஆடையை பயன்படுத்தி தூக்கிட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதோடு, சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது