( இறக்காமம் பிரதேச சபைக்கு திடிர் விஐயம்)



(அப்துல்சலாம் யாசீம்)

உள்ளுராட்சி மன்றங்களின் வினைத்திறன்ககளை  மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இன்று (31) 
அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச சபைக்கு திடீர் விஐயமொன்றினை மேற்கொண்டார்.

இதன் போது உள்ளுராட்சி மன்றங்களுக்கு இம்முமுறை புதிதாக தெரிவு செய்யப்படுகின்ற பிரதி நிதிகளுடைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இப்பிரதேசத்தின் அடிப்படை அபிவிருத்தி வசதிகள் தொடர்பாகவும் இறக்காமம் பிரதேச சபையின் செயலாளர்.உத்தியோகர்களுடன் கலந்துறையாடப்பட்டது.

இதே வேளை இறக்காமம் பிரதேசத்திற்குற்பட்ட பகுதியில் 18200 பேர் வாழ்ந்து வருவதாகவும் ஒரு வருடத்திற்கு ஆறு மில்லியன் ரூபாய் வருமானம் வருவதாகவும் இன்னும் சில முக்கிய வீதிகள்.நூலகங்கள் புணரமைக்கப்படாமல் இருப்பதாவும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதேவேளை ஒரு கிலோமீட்டர் வீதியை காபட் வீதியாக புணரமைப்பதற்கும் நவீன மயப்படுத்தப்பட்ட பொது நூலகமொன்றினை அமைக்கவுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இதன் போது தெரிவித்தார்.

இதில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன.கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர் எம்.வை.எம்.சலீம்
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.