மாரடைப்பால் மரணித்தார்,டுபாயில்



மாரடைப்பில் நாகூர் ஷிப்ரான் வபாத்!!
கொழும்பு இசிபத்தான கல்லூரியின் முன்னாள் மாணவரும் மொரட்டுவை பகுதியை சேர்ந்தவருமான நாகூர் ஷிப்ரான் எனப்படும் 39 வயது நபர் மாரடைப்பு காரணமாக டுபாயில் மரணமானார்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..)
கண்டி உடதலவின்ன பகுதியில் இல்லற வாழ்வில் இணைந்த இவர் தனது நான்கு பிள்ளைகள் (3பெண்,1ஆண்) மற்றும் மனைவியுடன் டுபாயில் வசித்து வந்த நிலையிலேயே மேற்படி திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது.
ஜனாஸா நல்லடக்கம் டுபாயில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சகோதரர் நாகூர் ஷிப்ரானின் மேலான மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் வாடும் குடும்ப உறவுகளின் உள ஆறுதலுக்கும் பிரார்த்திப்போம்