அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியின் இலங்கை போக்குவரத்து சபையின் அருகில் அமைந்துள்ள வளைவில் நேற்று (12) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர், மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அக்கரைப்பற்று, சின்னக்குளத்தை சேர்ந்த 36 வயதுடைய கிருஸ்ணபிள்ளை உதயகுமார் எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு பலியானார்.
விபத்தில் படுகாயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட இவர்கள் இருவரும், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
எனினும், ஒருவர் இன்று (13) உயிரிழந்தார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து பொத்துவில் பகுதியை நோக்கிப் பயணித்த இவர்களது மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பாதையை விட்டு விலகி, அருகில் இருந்த வடிகானுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை, அக்கரைப்பற்று பொலிஸார் மீட்டதுடன், விபத்தில் சிக்கியவர்களை, வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
சடலம், மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஸா விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment