அக்கரைப்பற்றில் நாம் செய்ய விரும்புவது என்ன?
சுத்தமான, சுகாதாரமான ஆரோக்கிய நகரம்!
(Clean & Healthy City).
(Clean & Healthy City).
நகரங்கள் கிராமப் புறங்களைப் போன்றல்லாது, சன அடர்த்தி கூடியதாகவும், நெருக்கமான கட்டிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். அவற்றைத் தொடர்ச்சியாக சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேண வேண்டியுள்ளது. இதற்கு கூடிய சிரத்தையும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத் திட்டமும் தேவை.
பொது சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 'வருமுன் காக்கும்' (Prevention) நடவடிக்கைகள் இவ்விடயத்தில் இன்றியமையாதனவாகும். இது தொடர்பிலான ஒருங்கிணைக்கப்பட்ட வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
டெங்கு நோயினால் சமீபத்தில் கூட இங்கு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைக் கட்டுப்படுத்துவதில் நன்கு முறைப்படுத்தப்பட்ட திட்டங்களும் செயற்பாடும் மிக அவசியம்.
அக்கரைப்பற்றை சுத்தமும் சுகாதாரமும் மிக்க நகராக மாற்றியமைப்போம். அதற்கான விரிவான வேலைத் திட்டங்களை முன்னெடுப்போம்.


Post a Comment
Post a Comment