ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இரத்தினபுரியில் நேற்று (27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்புக்கு தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஐக்கிய தேசியக் கட்சியும் விளக்கமளித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
அவர்களால் அரசாங்கமொன்றை அமைக்க முடியாது. பெரும்பான்மைப் பலம் எம்மிடம்தான் உள்ளது. பாராளுமன்றத்தில் 113 ஆசனங்கள் அவர்களிடமில்லை. கூட்டு எதிரணியிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இரவு பகலாக தங்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடம் வேண்டுகோள் விடுத்தவண்ணமுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சரியான கொள்கையொன்று ஐக்கிய தேசியக் கட்சியிடம்தான் உள்ளது. அடுத்து வரும் காலத்தில் நமக்கென ஒரு ஜனாதிபதியை ஏற்படுத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வோம்.
உள்வீட்டுப் பிரச்சினை காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் இரண்டாகப் பிரிந்துள்ளதாகவும் இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லையெனவும் அவர் சகோதர தனியார் ஊடகமொன்றுக்கு இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் விளக்கியுள்ளார்.
ஜனாதிபதியின் கருத்துக்கு மஹிந்த சார்பு கூட்டு எதிர்க் கட்சியும் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது


Post a Comment
Post a Comment