தம்புத்தேகம விபத்தில் 4 பேர் பலி



தம்புத்தேகம, கல்னேவ வீதியில் திஸ்பனேபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிறு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

முச்சக்கர வண்டியுடன் சிறிய ரக லொறி ஒன்று மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரும் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்தவர்களில் ஏழு வயதான ஆண் குழந்தையொன்றும் உள்ளடங்குகிறது. 

விபத்து தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.