வௌ்ளவத்தையில் கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் 5 ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழப்பு



வௌ்ளவத்தை பகுதியில் கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் 5 ஆவது மாடியிலிருந்து தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று (02) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த 22 வயதான இளைஞர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன் வௌ்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் மொரகல்ல பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.